இலங்கை கிரிக்கெட் தலைவரின் கருத்து ஏமாற்றம் அளிக்கின்றது

பாகிஸ்தான் வருத்தம்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் வீரர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விடுதியிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா கூறிய கருத்து ஏமாற்றம் அளிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கிரிக்கெட் குழுவின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை அணிக்கு ஜனாதிபதி அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் காயப்படுத்தும் அளவிற்கான இலங்கை கிரிக்கெட் தலைவரின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளது. முடிந்த அளவிற்கு அவர்கள் வசதியாக தங்க வேண்டும் என்று விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் 10 வருடங்களுக்கு பிற பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரில் விளையாடியது.

இதில் ஒருநாள் தொடரை 0-2 என இழந்த இலங்கை அணி, 20க்கு20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் சென்ற இலங்கை அணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித அசம்பாவிதமும் இதன்போது நிகழவில்லை.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை