ஐந்து கட்சிகளின் பொது இணக்கப்பாடு நேர்மையான அரசியலுக்கானது அல்ல

தமிழர்களுக்கான  கடைசி சந்தர்ப்பமும்  இழக்கப்படும்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளுக்கிடையில் பொது உடன்பாட்டை உருவாக்கிப் பொது ஆவணம் ஒன்றில் கையொப்பமிட முடியாமல் நிர்ப்பந்திக்கப்பட்டுத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு குழப்பகார கட்சி எனக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதனைப்பார்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது. யாழ். பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமிழ் தேசிய கட்சிகளிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தனர்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடாது வெளியேறிச் சென்றமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒற்றையாட்சியைப் பலப்படுத்த வேண்டும், சமஷ்டியை வழங்கப்போவதில்லை, இராணுவத்தைப் பாதுகாக்க போகிறோம், நிபந்தனைகளுக்கு இணங்கமாட்டோம், என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பகிரங்கமாக கூறியிருக்கின்றனர். இதனால், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்திருந்தோம்.

அதன் ஊடாகத் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற விரும்புகிறவர்கள், தமிழ் தரப்புக்களுடன் பேசும் நிலை உருவாக்கப்படும்.

அப்போது தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேரம் பேசுவதற்காகவே பல்கலைகழக மாணவர்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாங்கள் இணங்கி 5 பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டோம். இதில் சமஷ்டி தீர்வு வழங்கப்பட வேண்டும். என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொறுப்பு கூறல் விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் போர்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 10/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை