இரு மாதத்திற்கு ஒரு தடவை கேஸ் விலைகளில் மாற்றம்

லிட்ரோ கேஸ்  நிறுவனம் –-நுகர்வோர்  அதிகார சபையுடன் ஒப்பந்தம்

எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம்,நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இரண்டு வருட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இந்த இணை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், 2019 ஒக்டோபர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நுகர்வோர் பாவனைக்கான எரிபொருள் வாயு சிலின்டர் ஒன்றின் விலை 240 ரூபாயினால் (மாற்றம்) குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றம் இரண்டு மாதகாலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என்பதுடன், அடுத்த விலை மீளாய்வு நவம்பர் மாதம் இடம்பெறும் எனவும் லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

திரவ பெற்றோலிய எரிவாயு விலை மீளாய்வு தொடர்பான விலைச்சூத்திரம் ஒன்றை நிர்ணயிப்பது தொடர்பில் சுமார் இரண்டு வருட காலத்துக்கு மேலாக

உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முன்னர் இவ்வாறான விலைச்சூத்திரம் ஒன்று காணப்படாமை காரணமாக, உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி போன்ற காரணிகளால், எரிவாயு விற்பனை நிறுவனங்கள் பெருமளவு நிதி இழப்புகளையே பதிவு செய்திருந்தன. அதுபோன்று, உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்திருந்த போது, அல்லது இதர காரணிகளால் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்ட போது அதன் பயனை பாவனையாளர்களுக்கு அனுபவிக்க வழங்க முடியாத ஒரு நிலையும் காணப்பட்டது.

எனவே, இந்த புதிய உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையின் நுகர்வோருக்கும் பெருமளவு அனுகூலத்தை பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பில் தீர்மானிக்கும் அமைச்சரவை உபக் குழு மற்றும் இந்த குழுவினால் நியமிக்கப்பட்ட விலை தீர்மானிக்கும் குழு ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தீர்மானங்களின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளின் பிரகாரம் இந்த விலை மீளாய்வு தொடர்பான உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை