13 மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை எதிர்பார்ப்பு

நாட்டின் 13 மாவட்டங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலனறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, அம்பாறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் 75-_ 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றுமாலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10- _ 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 _ -80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் வேண்டப்படுகின்றனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 10/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை