அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவுஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஜௌபர்கான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எட்டு விளையாட்டுக் கழகங்கள் உதைப்பந்தாட்டசுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளை யாட்டு கழகமும், பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் கலந்துகொண்டது.

இரண்டு விளையாட்டுக் கழகங்களும் தலா இரண்டு கோல்கள் வீதம் பெற்று சமநிலைக்கு வந்த நிலையில்பெனால்டி முறையில் பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நான்கு கோல்களும்,வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் மூன்று கோல்களை பெற்றுக் கொண்டனர்.

அத்தோடுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டார குழுக்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டிஎட்டு வட்டாரக் குழக்கள் பங்கு பற்றியது. இதில் மீராவோடை கிழக்கு மற்றும் மீராவோடைமேற்கு வட்டாரக் குழு இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

இதில் மிராவோடை மேற்கு வெற்றிபெற்றது. இதில்சம்பியனாக பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டதுடன்.

வெற்றி பெற்ற கழகங்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கிண்ணமும் பதக்கங்களும் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளாக அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோரின் வரைந்த உருவப்படத்தினை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி வழங்கி வைத்தார்.

கல்குடா தினகரன் நிருபர்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை