ரி-20 கிரிக்கெட்டில் 4 ஓவரில் 75 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து கசுன் ரஜித மோசமான சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் இலங்கை பந்து வீச்சாளர்.

அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ரி -20 கிரிக்கெட் போட்டி கடந்த 27 ம் திகதி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் வோர்னர் 100 ஓட்டங்களும், ஆரோன் பிஞ்ச் 36 பந்தில் 64 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 28 பந்தில் 62 ஓட்டங்களும் விளாசினார்.

இலங்கை அணியின் கசுன் ரஜித நான்கு ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 75 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

இதன்மூலம் ரி -20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர்கள் வீசி அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் துருக்கி பந்து வீச்சாளர் 70 ஓட்டங்களும், அயர்லாந்து வீரர் 69 ஓட்டங்களும், தென்ஆப்பிரிக்க வீரர் 68 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்துள்ளனர்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை