ஆளுநர்கள் தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டும்!

ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

மாகாண ஆளுநர்கள்  ஜனாதிபதி தேர்தலில் நடு நிலை வகிக்க வேண்டுமெனவும், எந்தவொரு கட்சிக்காகவும் பேசக் கூடாதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். 

தான் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஆளுநர்களும் கடைப்பிடிக்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டிருப்பதாக ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.  ஜனாதிபதி தேர்தலில் அனைத்து ஆளுநர்களும் சுயாதீனமாக செயற்பட வேண்டும். ஆளுநர்கள் தமக்குரிய கடமைகளை தங்கு தடையின்றி தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். தேர்தலில் எந்தத் தரப்பு பக்கமும் சேர்த்து செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

என்றும் ஜனாதிபதி அறிவிறுத்தியிருப்பதாக தெரிவித்த ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ஜனாதிபதியின் அறிவிறுத்தலுக்கமைய தான் சுயாதீனமாக செயற்படவுள்ளேன் என்று தெரிவித்தார். இந்த ஜனாதிபதி தேர்தலில் மேல்மாகாண ஆளுநர் ஏ.கே.எம். முஸம்மில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து மேடைகளில் தோன்றி கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனைய மாகாணங்களின் ஆளுநர்கள் இதுவரையில் எந்தப் பக்கமும் சாயவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

எம்.ஏ.எம்.நிலாம் 

Sat, 10/12/2019 - 08:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை