கொழும்பு பல்லைக்கழக கிளையை அமைக்க மாலைதீவில் தனித்தீவு

 தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் நடத்திய பேச்சில் இணக்கம்

இலங்கை பல்கலைக்கழகக் கிளையொன்றை ​ மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டில் ஒரு தீவை வழங்க மாலைதீவு அரசு முன்வந்துள்ளது. இந் நிலையில், இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் கிளையை மாலைதீவில் அமைப்பதற்காக இரு நாடுகளினதும் துறைசார்ந்த உயர் அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக முன்னெடுப்பது தொடர்பாக மாலைதீவு தூதுவருக்கும் அமைச்சர் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பின்போதுபேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இலங்கையும் மாலைதீவும் இத்துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக எமது அமைச்சரவைத் தீர்மானங்களுக்கமைவாக ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு தூதுவர் உமர் அப்துல் ரஸ்ஸாக் நேற்று (01) நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை உயர் கல்வி அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான உயர் கல்வி, நீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு முதலான விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக

கலந்துரையாடினர். இதன்போதே இவ்விடயம்தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இருவருக்கிடையிலான சந்திப்பின்போது,

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சந்தர்ப்பமளிக்கும் வரைமுறைகளுக்கு அமைவாக மாலைதீவு மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கவும் கலந்தாலோசிக்கப்பட்டது .

இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களில் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் முதலான துறைகளில் அடிப்படை தகைமைகளை பெற்ற மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

நீர் வழங்கல், சுகநலப் பாதுகாப்பு மழை நீர் சேகரிப்பு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு முதலான விடயங்களில் இரு நாடுகளுக்கிடையிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டது.

 

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை