இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி மகளிர் அணி

இலங்கை -- அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியிலும், அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, அவுஸ்திரேலியா அணி 2--0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சிறிவர்தன 19 ஓட்டங்களையும், ஜெயங்கினி மற்றும் காஞ்சனா ஆகியோர் தலா 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், பெர்ரி 2 விக்கெட்டுகளையும், வலேமின்க், ச்சுட் மற்றும் கெர்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 85 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 9.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அவுஸ்திரேலிய அணி சார்பில், பர்ன்ஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும், பெத் மூனி ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும், ஹீலி 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில், பிரபோதினி 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகியாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை பெத் மூனி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, தற்போது இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெற்று வருகின்றது.

இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இவ் இரண்டு போட்டிகளிலம் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்று, தொடரை 2--0 என கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டி, இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை