பீற்றர் கெனமனின் 102 ஆவது பிறந்த தினம்

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பல தசாப்தங்களாகச் செயற்பட்ட அமரர் பீற்றர் கெனமனின் 102வது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (03) காலை 10.00 மணிக்கு எல்பின்ஸடன் அரங்கம் சரசவிபாய, மருதானை சந்தை மற்றும் டீ. பீ. ஜாயா போன்ற பிரதேசங்கள், பீற்றர் கெனமன் சதுக்கம் எனப் பெயரிடப்படவுள்ளது.இந்நிகழ்வு கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்கவின் தலைமையில் நடைபெறும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டியூ குணசேகர, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் சமாஜவாதி மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் சட்டத்தரணி ராஜா கொள்ளுரே ஆகியோர் பீற்றர் கெனமனின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்துவர்.

பீற்றர் கெனமன் 1947ம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு தெரிவானார்.

அதே வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய கொழும்பு பல் தொகுதியில் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்,1970ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை நிர்மாணத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

 

(மத்திய குறூப் நிருபர்)

Wed, 10/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை