நட்சத்திரம் ஒன்றை அழிக்கும் கருந்துளையின் காட்சி பதிவு

கருந்துளை ஒன்று நட்சத்திரத்தை அழிக்கும் காட்சியை விஞ்ஞானிகள் சிலர் பதிவு செய்துள்ளனர்.

நாசா அமைப்பின் கிரக வேட்டை தொலைநோக்கி மூலம் இதுபோன்ற ஓர் அரிய நிகழ்வு முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

375 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவான நட்சத்திரத்தின் விரிவான காலவரிசையை டேஸ் எனும் அமெரிக்க விண்வெளி தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.

நட்சத்திரம் ஈர்க்கப்பட்டு கருந்துளையைச் சுற்றி வளைக்கும் காட்சி தொலைநோக்கியில் பதிவுசெய்யப்பட்டது. கிட்டத்தட்ட சூரியனைப் போன்ற அந்த நட்சத்திரம் கருந்துளையால் உறிஞ்சப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறினர்.

நட்சத்திரம் கருந்துளைக்கு மிக அருகில் நகரும் போது அதுபோன்ற நிகழ்வு ஏற்படக்கூடும். கருந்துளையின் வலிமையான ஈர்ப்புத் தன்மை நட்சத்திரத்தை தூள் தூளாக்கி விட்டது.

அந்த நிகழ்வின்போது வெளியேறிய ஒளிரும் வாயு வட்ட வடிவில் கருந்துளையைச் சூழ்ந்து நின்றது.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை