சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த கைதி சிக்கினார்

சீனாவில் சிறையில் இருந்து தப்பிச் சென்று கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதி ஒருவரை பொலிஸார் பிடித்துள்ளனர். ஆளில்லா விமானத்தின் உதவியை பயன்படுத்தி அவர் ஒளிந்திருந்த குகையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

63 வயதான சொங் ஜியாங் என்ற அந்த நபர் பெண்கள் மற்றும் சிறுவர்களை கடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். எனினும் 2002 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றார். அவர் பல ஆண்டுகளாக மனிதத் தொடர்பற்று சிறிய குகை ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்தக் கைதி எங்கே இருக்கிறார் என்பது பற்றிய தகவல் செப்டெம்பர் ஆரம்பத்தில் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யூவான் மாகாணத்தில் தனது சொந்த ஊரில் அவரை தேடும் வழக்கமான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்தே ஆளில்லா விமானங்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலம் மனிதத் தொடர்பு இன்றி இருந்ததால் அவருடன் உரையாடுவது கடினமாக இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை