இந்திய தொடரிலிருந்து தமிம் இக்பால் விலகல்

இந்திய அணியுடன் நடைபெற உள்ள டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி ஆரம்ப வீரர் தமிம் இக்பால் விலகியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி டெல்லியில் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில், பங்களாதேஷ் அணி ஆரம்ப வீரர் தமிம் இக்பால் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

ஏற்கனவே விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர், மனைவிக்கு 2ஆவது பிரசவம் என்பதால் உடனிருப்பதற்காக இந்திய டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.

டி20 அணியில் அவருக்கு பதிலாக இம்ருல் கைஸ் சேர்க்கப்படுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் டி20 அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டன் தாஸ், இம்ருல் கைஸ், சவும்யா சர்க்கார், முகமது நயிம், முஷ்பிகுர் ரஹிம், மஹமதுல்லா, ஆபிப் உசேன், அமீனுல் இஸ்லாம், அராபத் சன்னி, அல் அமின் உசேன், முஸ்தபிசுர் ரகுமான், ஷபியுல் இஸ்லாம்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை