பாக். டெஸ்ட் தொடருக்கு இலங்கை பச்சைக்கொடி

பாகிஸ்தானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இலங்கை பச்சைக் கொடி காட்டியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது.

இதனையடுத்து, ஐ.சி.சி உலக டெஸ்ட சம்பியன்ஷிப்பின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு இலங்கையிடம் கோரப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 11ஆம் திகதி ராவல்பிண்டியிலும், 2ஆவது டெஸ்ட் டிசம்பர் 19ஆம் திகதி கராச்சியிலும் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையின்் தலைவர் ஷம்மி சில்வா, மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, இலங்கை வீரர்களின் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் சபையின் பொறுப்பாகும், இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்திருந்தால், அண்மையில் நடந்து முடிந்த ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான பாகிஸ்தான் சுற்றுப்பயண ஏற்பாட்டை இலங்கை முன்னெடுத்திருக்காது.

இதன் மூலம் எதிர்காலத்தில் வீரர்களின் நம்பிக்கை அளவை மேம்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். டெஸ்ட் போட்டிகளின் அட்டவணை குறித்து நாங்கள் விவாதங்களைத் தொடங்கும்போது இது முக்கியமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை