நியூசி. டி20 அணியில் வில்லியம்சன் இல்லை

இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி, வரும் நவம்பர் 1ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக அவதிபட்டு வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ண தொடரில் அணியை சிறப்பாக வழி நடத்தி, இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பதினொருவர்–இங்கிலாந்து மோதும் பயிற்சி டி20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. டி20 தொடரையடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை