இந்த வாரத்திற்குள் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு தீவிர முயற்சி

பிரெக்சிட்டுக்குப் பின்னர் பிரிட்டனுடன் தொடர வேண்டிய சிறப்பு வர்த்தக உறவு தொடர்பான ஒப்பந்தம் இந்த வாரத்துக்குள் எட்டப்படலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லக்ஸம்பார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுளின் இரகசியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த, ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலான பிரெக்சிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவார் மைக்கேல் பார்னியர் கூறியதாவது:

பிரிட்டனுடன் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உண்மையை கூறப்போனால் இருதரப்பினரும் ஒப்பந்தத்தை எட்டுவது என்பது மிகவும் கடுமையான பணியாக இருக்கும். இருந்தாலும், இந்த வாரத்துக்குள் பிரெக்சிட் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னமும் வாய்ப்புள்ளது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி விலக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்படுத்த தாம் கோரப்போவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியாக உள்ளார்.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை