கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிதாரியை தடுத்த பொலிஸாருக்கு விருது

நியூசிலந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைப் பிடித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு துணிச்சல் விருது வழங்கப்பட்டது.

அதிகாரிகள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்திய ஆடவரைப் பிடித்ததற்காக அந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரி மூன்றாவது பள்ளிவாசலுக்குச் செல்லும்போது அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

தாக்குதல் நடத்திய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் மீது 92 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை