ஹொங்கொங் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையூறு

ஹொங்கொங் பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து அந்த நகர தலைவர் கர்ரி லாம் தனது ஆண்டு உரையை இடைநிறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஆரம்பமான அமர்வில் கோசம் எழுப்பியும், பாதாகைகளை ஏந்தியும் இடையூறு செய்தனர். ஆரம்பத்தில் இடையூறு காரணமாக அமர்வு ஒத்தி வைக்கப்பட்டு கூடிய நிலையில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டது. முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையுடன் பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டது.

பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டதால் ஹொங்கொங்கில் பல மாதங்களாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான, குற்றப்பின்னணி கொண்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை முறைப்படி வாபஸ் பெற முடியாமல்போயுள்ளது.

கடந்த ஏப்ரலில் இந்த நாடுகடத்தும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது தொடக்கம் ஹொங்கொங்கில் ஆர்ப்பட்டங்கள் நீடித்து வருகிறது.

கடந்த ஜூலையில் பாராளுமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த பின்னர் பாராளுமன்றம் நேற்றே முதல் முறை கூடியமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஹொங்கொங் தலைவர் லாம் தனது உரையை ஆரம்பித்தபோது, அவருக்கு பின்னால் எதிர்க்கட்சி உருப்பினர்கள் பதாகைகளை காண்பித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை