20க்கு20 உலகக்கிண்ணம்: சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

கிரிக்கெட் போட்டிகளில் இரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் 20க்கு20 கிரிக்கெட்டின் திருவிழா என வர்ணிக்கப்படும் 20க்கு20 உலகக்கிண்ண தொடர், அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 8ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இத்தொடருக்கான தயார்படுத்தல்களை, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் 20க்கு20 உலகக்கிண்ண தொடரில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு இடையிலான பரிசுத் தொகையில் சமநிலையை உறுதி செய்வதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதில் ஆண்கள் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை பெண்கள் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, பரிசுத் தொகையை 320 சதவீதம் அதிகரிப்பதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இதன்மூலம் வெற்றியாளர்கள் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை, கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

ஐ.சி.சி.யின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா மகளிர் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், அந்த தொகையை 600000 அமெரிக்க டொலர்களாக உயர்த்தவும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை