ஆரம்பநிலை நிறுவனங்களை வலுவூட்டும் Disrupt Asia

முன்னணி ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான மாநாடு மற்றும் புத்தாக்க கொண்டாட்ட நிகழ்வான Disrupt Asia, 2016 இல் ஆரம்பிக்கப்பட்டு வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வானதுமுதலீடுகள் மற்றும் வலையமைப்பு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதிகள் உருவாக்கும் வகையில் சமூகத்தினரை ஒன்றிணைக்கின்றது.

2016, 2017 மற்றும் 2018 போன்ற வருடங்களில் Disrupt Asia நிகழ்வு தொடர்ச்சியாகஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பங்குபற்றுபவர்கள் ஓர் தனித்துவமான சூழலில் திறமையும் ஆர்வமும் மிகுந்த வழிகாட்டிகளினால் சூழப்பட்டு சிறந்த உபகரணங்களின் பாவனை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டனர். ஆரம்ப நிலை நிறுவனங்களின் முன்னேற்றங்களை பதிவு செய்தல், வியாபாரங்களை உருவாக்குதல், ஸ்தாபகராவதற்கான நிகழ்வு, மனித மற்றும் பொருளாதார வளங்களை பொருத்தமாக கையாள்தல்என்பனகுறித்த அணுகுமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

முக்கியமாக, Disrupt Asia என்பதுபொருத்தமான பேச்சாளர்கள் மற்றும் வளவாளர்களை வெளிநாடுகளிலிருந்து இனங்கண்டு கவர்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தது.

குறிப்பாக,தமது கட்டமைப்பில் ஆர்வம் கொண்டுள்ள தனிநபர்கள் இதில் அடங்கியிருந்தனர். முதலீட்டாளர் ஒருவரை சந்திப்பது, எதிர்கால வாடிக்கையாளர் அல்லது வளவாளர் ஒருவருக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்ததனூடாக நிறுவனம் ஒன்றுக்கு பிரிதொரு சந்தைக்கு விஸ்தரிக்க முடிந்திருந்தமை என்பன இந்த மாநாடுகளினூடாக அடையப்பெற்றிருந்த மாபெரும் சாதனையாக அமைந்திருந்தது.

Igniter Space என்பது, புத்தாக்கம் தொடர்பான பயணத்தில் சிறுவர்களை கொண்டு செல்வதுடன், எதிர்காலத்துக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவோராக அவர்களை மாற்றியமைத்திருந்தது.

இது Disrupt Asia இன் குறிப்பிடக்கூடிய அனுகூலம் பெறுநராக அமைந்துள்ளது.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை