29வது வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற மாணிக்க கற்கள், ஆபரணங்கள் கண்காட்சி

  ருஸைக் பாரூக்

மாணிக்கக் கற்கள் மற்றும் நகை சர்வதேச கண்காட்சியின் (FACETS) 29வது வருட கண்காட்சிகள் கொழும்பில் பூர்த்தியடைந்தன. கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு நேற்றுவரை இடம்பெற்றது.

இவ்வருட கண்காட்சியில் இலங்கை சபாயார் ஜேம்ஸ் இரத்தினக்கற்களை கொள்வனவு செய்பவர்களில் ஒருவரான லூயிஸ் ஆலன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இது தவிரவும் தொழில்துறை மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பதிரன, தேசிய மாணிக்கக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் புதிய தலைவராக சுமித் லால் மெண்டிஸ், இலங்கை மாணிக்கக் கற்கள் மற்றும் நகைகள் சங்கத் தலைவர் செம் ரிபாயி, இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச மற்றும் உள்ளூர் ரத்தின மற்றும் நகைத் தொழில்கள், தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். பிரதம காட்சிக்கூடங்களைப் பார்வையிட்டிருந்ததுடன், இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் கண்கவர் ஆய்வக உபகரங்கள் மற்றும் கருவிகளைப் பாராட்டினார்.

Mon, 09/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை