பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக தலைமை ஆசிரியர் மீது பதின்ம வயது மாணவர் ஒருவர் குற்றஞ்சாட்டியதால் தலைமையாசிரியரை தாக்கிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சிந்து மாகாணத்தில் அந்த பாடசாலையை நடத்தும் தலைமையாசிரியர் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டினர்.

அதன் பின்னர் ஒரு பெரிய கும்பல் ஒன்று கடந்த சனிக்கிழமையன்று கோட்கி நகரில் உள்ள இந்து கோயில், கடைகள் மற்றும் பாடசாலைகளை தாக்கினர்

தலைமையாசிரியரின் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொலிஸாரின் பிடியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும்.

கலவரக்காரர்கள் மீதும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களின் மீது மரண தண்டனை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது.

“குற்றம் சுமத்தப்பட்ட நபர் பொலிஸாரின் பிடியில் உள்ளார்” என பொலிஸ் பரிசோதகர் ஜமில் அகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“கோட்கியில் 12 மணி நேரத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. தகவல்களை சரிபார்த்து முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குண்டர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கிறித்தவ பெண்ணான ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டார். ஆசியா பீபி வழக்கால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கு பெரிதும் பேசப்பட்டது.

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை