சஜித்துடன் இணைவதற்கு திஸ்ஸ அத்தநாயக்க முடிவு

விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பிவைப்பு

ஐ.தே.க வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்தார். இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், அவருடன் இணைந்து கட்சியை வெல்ல வைப்பதாகவும் உறுதியளித்தார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,

2015 தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு

வெல்லக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதற்கு மாற்றமான முடிவு எடுத்ததன் காரணமாகவே ஐ.தே.கவில் இருந்து ஒதுங்கி செயற்பட நேரிட்டது. 2015 தேர்தலில் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரியிருக்கையில் அதற்கு மாற்றமாக கட்சி முடிவு எடுத்த போது நான் குரல் கொடுத்தேன். யாரும் அதனை செவிமடுக்கவில்லை.

அதன் தாக்கத்தை நான் அன்றே உணர்ந்திருந்தேன்.

ஐ.தே.க வினூடாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெல்லக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதால் உங்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளேன். உங்கள் தலைமையில் கட்டியெழுப்பப்படும் இலங்கையின் எதிர்காலத்தை பலப்படுத்துவதற்கு உங்களுடன் கைகோர்க்குமாறு கட்சியில் இருந்து விலகிச்சென்ற சகலருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

உங்கள் வெற்றிக்காக எனது முழு சக்தியையும் பிரயோகிக்கவும் உங்கள் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றவும் அர்ப்பணிப்பேன்.(பா)

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை