வெள்ளம், வரட்சி; யுத்தத்தை விடவும் சவால் மிக்கதாக மாறும்

எதிர்காலத்தில் வெள்ளம் மற்றும் வரட்சி என்பவற்றினால் ஏற்படும் சவால் யுத்தத்தை விடவும் பாரிய சவாலாக அமையும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பு தொடர்பாக மேலும் கூறுகையில்,

மேல்மாகாணத்திலும் கிழக்கிலும் சப்பரகமுவிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இக் காலத்தில் வழமையாக வடகிழக்கு இடைநிலை பருவப் பெயர்ச்சி மழை பெய்யும். ஆனால் தென்மேல் பருவப் பெயர்ச்சியினால் கடும் மழை மற்றும் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.

அறுவடை காலத்தில் மழை பெய்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகவே மழை வீழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனித சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சவலாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலைமை இலங்கைக்கு மட்டுமன்றி உலகிற்கும் பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்திற்கும் வரட்சிக்கும் வெள்ளத்திற்கும் தீர்வு காண்பதற்காக நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த பாரிய முதலீடு செய்ய வேண்டும். உலகில் சுற்றுச்சூழல் பேரழிவு தொடர்ந்தால் 2050 இல் இவ்வுலகம் மனிதன் வாழ முடியாத இடமாக மாறும் என்றார்.

 

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை