எதிரணியின் உறுதிமொழியால் பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்த முடியாது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் உண்மையை வெளிக் கொணர்வது எமது கடமையாகும். எந்தவொரு தினத்திலும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக தான் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லையென்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இத்தாலியின் பேராயருடன் நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மெல்கம் ரஞ்சித் ஆண்​டகை இவ்வாறு தெரிவித்தார்.

"தமக்கு இவ்வாறானதோர் அழிவைச் செய்துள்ளார்கள் எனத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கின்றனர். அவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்துவது இன்று எமது கடமையாகவுள்ளது. இது தொடர்பில் ஒவ்வொரு சதி குறித்தும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் முழுமையாக ஆய்வுசெய்யும் வரை அவர்களை ஆற்றுப்படுத்த முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒவ்வொன்றைக் கூறுகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைவிட முன்னேற்றமான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதேநேரம் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதனைச் செய்வோம் இதனைச் செய்வோம் என்று கூறுகின்றார்கள். எனினும், இது தொடர்பில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்துகின்றார்கள் இல்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் உறுதிமொழிகளை மாத்திரம் வழங்குவதால் இது சரிப்பட்டுவிடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் எதையாவது செய்ய வேண்டும். நான் ஜனாதிபதிக்கு இது பற்றி எழுதியிருந்தேன். எனினும், இதுவரை எனக்கு அவரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும்" என்றும் கூறினார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். எனினும், அவர் அதிகாரத்தில் இல்லை. இதனைவிட ஜனாதிபதி, பிரதமர் போன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் இது தொடர்பில் ஏதாவது செய்ய வேண்டும். இந்த நாட்டில் சுதந்திரத்தின் பின்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் எவை எவை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றி மக்களுக்குத் தெரியும்.

எந்தவோர் அரசியல் தொடர்பும் இன்றி எந்தவொரு நபருக்கு எதிராகவும் தீர்மானம் எடுக்கக் கூடிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நமது நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை