​மேலும் மூன்றரை இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

மேலும் மூன்றரை இலட்சம் பேருக்கு எதிர்வரும் ஒரு மாத காலத்தினுள் சமுர்த்தி கொடுப்பனவு வழங்க இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். சமுர்த்தி பெறுவதற்காக 4 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியுள்ளவர்களை உள்ளடக்க இருப்பதாகவும்அவர் கூறினார். அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர்,

எமது அரசாங்கத்தின் கீழ் சமுர்த்தி அமைச்சர்களாக சஜித் பிரேமதாஸ, எஸ்.பி திசாநாயக்க, பீ. ஹரிசன் போன்றோர் செயற்பட்டார்கள்.ஆனால் பிரதமர் எதிர்பார்ப்பது போன்று சமுர்த்தி கிடைக்காதவர்களுக்கு சமுர்த்தி வழங்க இவர்களால் முடியவில்லை. 52 நாள் சதியால் நாடு பின்நோக்கி சென்றது. இதன் பின்னர் சமுர்த்தி அமைச்சு எனக்கு வழங்கப்பட்டது.

சமுர்த்தி கிடைக்காதவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி வழங்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் 25 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சமுர்த்தி வழங்கினோம்.மேலும் 4 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இந்த பணிகள் தடைப்பட்டன.

கடந்த ஆட்சியில் சமுர்த்தி நிவாரணம் வழங்க 130 கோடி வழங்கப்பட்டது. நாம் அதனை 500 கோடியாக அதிகரித்துள்ளோம். இலவசமாக சமுர்த்தி வழங்கி மக்களை வலுவூட்ட முடியாது. 50ஆயிரம் திட்டங்களை ஆரம்பிக்க இருப்பதோடு அதில் 20 ஆயிரம் திட்டங்கள் இந்த வருடத்தினுள் முன்னெடுப்போம்.இதற்கு கட்சி பேதமின்ற சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.(பா)

 

 

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை