வடமேற்கு சிரியாவில் உக்கிர மோதல்: 51 படையினர் பலி

வட மேற்கு சிரியாவில் அரச எதிர்ப்பாளர்களுக்கும் அரச படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற உக்கிர மோதல்களில் இரு தரப்பிலும் 51 படையினர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜிஹாதிக்கள் கடடுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாநில முனைகளில் ரஷ்ய ஆதரவு அரச படையினர் பல வாரங்களால் தாக்குதல்களை தீவிரப்படத்தியுள்ளனர். துருக்கி எல்லையை ஒட்டிய இந்த மாகாணத்தின் மீது பல மாதங்களாக குண்டு வீசப்பட்டு வருகிறது.

எனினும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்கள் நேற்று தெற்கில் அரச ஆதரவு நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டது.

இந்த மோதல்களில் 23 அரச படைகள் மற்றும் 20 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் 13 ஜிஹாதிக்களும் இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் கான் ஷெய்கூன் நகரை கைப்பற்றிய அரச படை அண்மைய தினங்களில் வடக்காக முன்னேறி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை கிளர்ச்சியாளர் பகுதி மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 12 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை