பங்களாதேஷ் திருமண பதிவில் ‘கன்னித்தன்மை’ பதம் நீக்கம்

திருமணப் பதிவில் பெண்கள் தமது கன்னித்தன்மை குறித்து இனியும் அறிவிக்க வேண்டியதில்லை என்று பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னித்தன்மை என்பதற்கு பதில் திருமணமாகதவர் என்று மாற்றும்படி நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அந்த திருமணப் பதிவில் இருக்கும் மற்ற இரு தேர்வுகளான “விதவை” மற்றும் “விவாகரத்து பெற்றவர்” என்பதில் எந்த மாற்றமும் செய்யப்பவில்லை.

“கன்னித்தன்மை” என்ற சொற்பிரயோகம் அவமானகரமானது என்று கூறி வந்த பெண் உரிமையாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இதில் மணமகன் தனது திருமண அந்தஸ்தை கட்டாயம் அறிவிக்கவும் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை பங்களாதேஷின் திருமணச் சட்டம் கட்டுப்பாடான மற்றும் பாகுபாடு கொண்டது என்று பெண்ணுரிமையாளர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது. மிகச் சிறு வயதிலேயே பல பெண்கள் வலுக்கட்டாயமாக திருமணம் முடித்துவைக்கப்படுகின்றனர்.

2014ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் குழு ஒன்று தொடுத்த வழிக்கின் தீர்ப்பே தற்போது வெளியாகியுள்ளது.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை