அமெரிக்காவுடனான பேச்சை ஈரான் ஜனாதிபதி நிராகரிப்பு

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முதல் படியாக அமெரிக்கா ஈரான் மீதான தடைகளை அகற்ற வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி வலியுறுத்தியுள்ளார்.

“இந்த நடவடிக்கை இன்றி, இந்தப் பூட்டு திறக்கப்படாது” என்று ரூஹானி கூறினார்.

நிலைமை சரியாக அமைந்தால் ஈரானுடனான சந்திப்பு ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய நிலையிலேயே ரூஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈரானுடனான அணு உடன்படிக்கையில் இருந்து விலகி அந்நாட்டின் மீது அமெரிக்கா தடைகளை கொண்டுவந்திருக்கும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

அணு விவகாரம் தொடர்பில் புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தவும், ஈரானின் ஏவுகணை திட்டத்தை நிறுத்தவும் டிரம்ப் எதிர்பார்த்துள்ளார். ஈரான் இதனை மறுத்து வருகிறது.

2015 இல் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையில் ஏனைய உலக வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நீடிக்கின்றன. எனினும் அமெரிக்காவின் தடைகள் ஈரான் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை