சிரிய ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து: 31 பேர் பலி

சிரிய விமானப்படை தளத்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் பலியாகினர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருபவர்கள் மீது அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

2011ஆம் ஆண்டு முதல் சிரிய அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களை வான்வெளி தாக்குதல் மூலம் ஒடுக்கும் பணியில், சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் விமானப்படை தளம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இங்கு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த விமானப்படை தளத்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அங்கு காலாவதியான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை