2 ஆவது போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ், 65 ஓட்டங்களால் வெற்றி தொடர் சமநிலையில் நிறைவு

டி எப்.சி.சி வங்கி கிண்ண டெஸ்ட் தொடர்:

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1--1 சமன் செய்தது.

நியூசிலாந்து அணி 5 ஆவது நாள் போட்டி நிறைவுபெறுவதற்கு ஒரு மணித்தியாலம் உள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பதிலெடுத்தாடிய அவ்வணி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் பறி கொடுத்தது.

நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 431 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வருவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இல ங்கை அணியின் விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தன.இலங்கை அணி சார்பாக விக்கெட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல பெற்ற அரைச்சதத்துடன் (51 ஓட்டங்கள்) இலங்கை அணி சற்று வெற்றி பெறும் என நினைத்தாலும் அவர் 3 மணித்தியாலங்கள் களத்தில் நின்று போராடினாலும் வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்து கை நழுவியது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களையும் பெற்றதே கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும். பந்து வீச்சில் செளத்தீ 4 விக்கெட்டையும் போல்ட் 3 விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அத்துடன் நியூசிலாந்து அணி சார்பாக முதல் இன்னிங்ஸில் லதம் 154 ஓட்டங்களையும் விக்கெட் காப்பாளர் வோட்டலிங் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும் கிரான்ட்ஹோம் 83 ஓட்டங்களையும் பெற்றதே அவ்வணி சார்பாக பெற்ற கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டையும் எம்புல் தெனிய இரண்டு விக்கெட்டையும் குமார ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இலங்கை அணி சார்பாக திக்வெல்ல 51 ஓட்டங்களையும் கருணாரத்தன 21 ஓட்டங்களையும் மென்டிஸ் 20 ஓட்டங்களையும் பெற்றதே கூடுதலான ஓட்ட எண்ணிக்கையதாகும்.பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக போல்ட்,செளத்தீ, பட்டேல், சமர்விலி தலா இரண்டு விக்கெட்டையும் கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டொம் லதம் தெரிவானார்.தொடர் நாயகனாக பி.ஜே வோட்டலிங்கும் தெரிவானார்.

இந்த போட்டியில் டிம் செளத்தீ தனது 250 ஆவது விக்கெட்டை கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை தக்கவைத்தது.அத்துடன் இலங்கை அணி 60 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இரண்டு அணிகள் மோதும் முதலாவது 20 க்கு போட்டி எதிர்வரும் 1ம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பரீத் ஏ றகுமான்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை