கவர்ச்சி பாடகி மினாஜ் சவூதி செல்ல மறுப்பு

பெண் உரிமை மற்றும் ஒருபால் உறவினருக்கு ஆதரவாக, சவூதி அரேபியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த தனது இசை நிகழ்ச்சியை அமெரிக்க பாடகி நிக்கி மினாஜ் ரத்துச் செய்துள்ளார்.

ஆபாச ஆடைகளுடன் தோன்றும் அந்த பாடகி சவூதியில் எவ்வாறு தனது இசை நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஜித்தா நகரில் நடைபெறவுள்ள அந்த இசை விழாவில் அவர் பங்கேற்பது குறித்து மனித உரிமை அமைப்புகளும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன. பழைமைவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சவூதி அரேபிய நாட்டின் பொழுதுபோக்கு துறையில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி கலைத் துறைய வளர்ச்சிபெறச் செய்ய முயன்று வருகிறது.

“பிரதிபலிப்பு குறித்து உன்னிப்பாக அவதானித்த பின் ஜத்தாவில் தி்டமிடப்பட்ட எனது இசை நிகழ்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்காமல் இருக்க நான் தீர்மானித்தேன்” என்று அந்தப் பாடகி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மரியாஹ் கெர்ரி மற்றும் நெல்லி ஆகிய பாடகர்களும் சவூதி அரேபேியாவின் அழைப்பை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை