சிரியாவுக்கு துருப்புகளை அனுப்பும் பிரிட்டன், பிரான்ஸ்

சிரியாவுக்கு இராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டனும், பிரான்ஸும் விருப்பம் தெரிவித்துள்ளன.

“பிரான்ஸ், பிரிட்டனிலிருந்து சுமார் 10 முதல் 15 வீதமாக துருப்புகள் சிரியாவுக்கு அனுப்ப அந் நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும்் உண்மையில் பிரான்ஸ், பிரிட்டனிலிருந்து எவ்வளவு வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர் என்பது இரகசியமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை ஜெர்மனி நிராக்கரித்தது.

மேலும் இதில் பிரிட்டன், பிரான்ஸுடன் இணைவதற்கு இத்தாலி ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து சில ஆண்டுகள் சண்டையிட்டு வருகின்றது. இதில் ஓராளவு வெற்றி அடைந்ததன் விளைவாக அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு எதிராக சண்டையிட தற்போது பிரிட்டனும், பிரான்ஸும் தமது வீரர்களை அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளன.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை