கிரேக்க பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

கிரெக்க பாராளுமன்ற தேர்தலில் பழைமைவாத எதிர்க்கட்சித் தலைவர் கிரியகோஸ் மிட்சொடகிஸ் வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மிட்சொடகிஸின் புதிய ஜனநாயகக் கட்சி 39.8 வீத வாக்குகளை வென்றதோடு தற்போதைய பிரதமர் அலெக்சிஸ் ட்சிபிராஸ் 31.5 வீத வாக்குகளை வென்றார்.

நவ நாஜி ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட தீவிர வலதுசாரி கோல்டன் டோன் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தக் கட்சி பாராளுமன்ற அங்கத்துவத்தை பெறுவதற்கான 3 வீத வாக்களை வெல்லத் தவறியுள்ளது. கிரேக்கம் பெருளாதார நெருக்கடியை சந்தித்த காலத்தில் இந்தக் கட்சி மூன்றாவது சக்தியாக வளர்ச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவின் அண்மைய போக்கான பிரதான அரசியல் முகாமை நிராகரிப்பது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கட்சிகளை மறுப்பதை காட்டுவதாக இந்த தேர்தல் முடிவுகள் இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். 51 வயதான மிட்சொடகிஸ் தனது தேர்தல் பிரசாரத்தில் வரியை குறைப்பது, கவர்ச்சிகரமான முதலீடுகள் மற்றும் தொழிற்சந்தையை மேம்படுத்துவது குறித்து வாக்குறுதி அளித்திருந்தார்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை