ஹொங்கொங்கில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: அறுவர் கைது

ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று தொடர்பில் மீண்டும் வெடித்த வன்முறையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மொங்கோக் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். கலகத் தடுப்பு பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

மொங்கோக் பகுதியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கடந்த ஞாயிறு நள்ளிரவுக்குள் பெரிதளவில் கலைத்துவிட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

மொங்கோக் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியது குறித்து, அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் வருத்தம் தெரிவித்தார். கடந்த ஞாயிறு மதியம் சுமார் 230,000 பேர் கெளலுௗன் பகுதியில் பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர், மாலை வேளைக்குள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். ஆனால், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் பின்னர் மொங்கோக் பகுதிக்குப் பேரணியாகச் சென்று வீதிகளை மறித்தனர்.

அப்போது பாதுகாப்பு படையொன்றுடன் மோதல் ஏற்பட்டது.

சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை, விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைப்பதை அனுமதிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் நிராகரிக்கவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை