இந்தோனேசியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேசியாவின் சுலவாசி தீவின் வடக்கு கரையில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் பூகம்பத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சற்று நேரத்தில் அது அகற்றிக்கொள்ளப்பட்டது.

36 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்த பூகம்பத்திற்கு பின்னர் சிறு அதிர்வுகள் பதிவானதாக புவிப்பெளதீகவியல் நிறுவனம் குறிப்பிட்டது.

இதனால் சில நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததோடு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கரையோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். “அதிர்வு பலமாக உணரப்பட்டதோடு அதன் தீவிரம் நீண்ட நேரம் நீடித்தது” என்று தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனத்திற்காக பேசவல்ல யூசுப் லதீப் குறிப்பிட்டார். சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சுலவாசி தீவின் பாலு பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 7.5 ரிச்டர் அளவு பூகம்பம் காரணமாக 2,200 பேர் வரை உயிரிழந்ததோடு பலரும் காணாமல்போயினர்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை