லிபிய ஹப்தர் படைக்கு துருக்கி கடும் எச்சரிக்கை

தடுத்து வைத்திருக்கும் ஆறு துருக்கியர்களையும் உடனடியாக விடுவிக்காத பட்சத்தில் லிபியாவின் பலம்கொண்ட நபரான கலீபா ஹப்தர் தமது நேரடி இலக்காகக் கூடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.

தமது பிரஜைகளை தடுத்து வைத்திருப்பது ஒரு கொள்ளையாக கருதப்படும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.

லிபியாவின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு அதரவு அளிக்கும் துருக்கி தமது இலக்காகக் கூடும் என்று ஜெனரல் ஹப்தர் படை கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தது. திரிபோலி விமானத் தளம் ஒன்றில் இருந்த துருக்கி ஆளில்லா விமானம் ஒன்றை தகர்த்ததாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

நீண்டகால தலைவர் முஅம்மர் கடாபி 2011 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்டது தொடக்கம் லிபியாவில் அரசியல் பிளவு மற்றும் வன்முறைகள் நீடித்து வருகின்றன.

லிபியாவின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக ஹப்தர் படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் லிபிய அரசுக்கு துருக்கி ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றமை குறிப்பிடத்தப்பது.

மறுபுரம் ஹப்தர் படைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து உதவி வருகின்றன.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை