தலிபான் தாக்குதலில் ஆப்கானில் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளில் 10 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் நிரம்பி வழிந்த காலை நேரத்தில் தலைநகர் காபுலில் கார் குண்டு வெடித்ததோடு அதனைத் தொடர்ந்து குறைந்தது மூன்று துப்பாக்கிதாரிகள் அமைச்சரவை கட்டிடத்திற்கு நுழைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

அமைச்சரவை கட்டிடத்திற்கு வெளியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 65 பேர் காயமடைந்திருப்பதோடு இதில் ஒன்பது சிறுவர்களும் அடங்குகின்றனர். எனினும் இராணுவத்தை இலக்கு வைத்தே இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கட்டாரில் 7ஆவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இடம்பெறும் வேளையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை