சீனாவில் புதிய விமான நிலையம் செப்டெம்பரில் திறக்க ஏற்பாடு

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பல பில்லியன் டொலர் செலவிலான நட்சத்திர மீன் வடிவ விமான நிலையத்தின் திறப்பு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கம்

யூனிஸ்ட் அரசாங்கம் இந்த ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி அதன் 70 ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது. அதற்கு முதல் நாள், செப்டம்பர் 30 ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்படவுள்ளது.

விமான நிலையத் திறப்பு விழாவில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொள்வார் என்றும் பிரமாண்டமான அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஓடுபாதைகளுடன் விமான நிலையம் முழுமையாகச் செயல்படவுள்ளது. ஆண்டுக்கு 72 மில்லியன் பயணிகள் வருகை தருவர் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

2040 ஆம் ஆண்டில் விமான நிலையத்தில் 8 ஓடுபாதைகள் செயல்படும் என்றும் அப்போது ஆண்டுக்கு 100 மில்லியனுக்கு மேற்பட்ட பயணிகளை வரவேற்க இயலும் என்றும் கூறப்பட்டது.

விமான நிலையத்தை உருவாக்குவதற்கு சீனா கிட்டத்தட்ட 17.5 பில்லியன் டொலரைச் செலவு செய்துள்ளது.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை