ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் தடியடிப் பிரயோகம்

ஹொங்கொங்கை பிரிட்டனிடம் இருந்து சீனாவுக்கு கையளித்த ஆண்டு நிறைவையொட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த நிகழ்வின் கொடியேற்ற வைபவம் இடம்பெறும் இடத்திற்கு வெளியில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர் குழு ஒன்று அரச கட்டிடத்திற்குள் நுழைய முயன்றது. எனினும் ஹொங்கொங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய வீதிகளை முற்றுகையிட்டுள்ளனர். குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம் ஒன்று தொடர்பில் ஏற்கனவே ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த சட்டத்தை இடைநிறுத்துவதற்கு அரசு முன்வந்தபோதும் பேரணிகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஹொங்கொங் தலைவியான கர்ரி லாம்மை பதவிவிலகக் கோரும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஹொங்கொங் ஒப்படைக்கப்பட்டது முதல் ஆண்டு நிறைவு நாளான ஜூலை முதலாம் திகதி ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறும்.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை