இராணுவத்திற்கு எதிராக சூடானில் ஆர்ப்பாட்டம்: பலரும் உயிரிழப்பு

சூடானில் இராணுவ அரசுக்கு எதிராக பெரும் தொகையான மக்கள் வீதிக்கு இறங்கிருப்பதோடு, இந்த ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பதிவாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் ஏழு பேர் உயிரிழந்து 181 பேர் காயமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சூடானின் நீண்ட காலத் தலைவர் ஒமர் அல் பஷீர் கடந்த ஏப்ரலில் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அங்கு அரசியல் பதற்றம் நீடித்த வருகிறது.

இந்நிலையில் ஆட்சியை சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கக் கோரியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜுன் 3 ஆம் திகதி எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்ட முகாமை கலைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்ததில் பல டஜக் பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையே முதல் முறை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து நால்வர் உயிரிழந்திருப்பதாக சூடான் மருத்துவர்களின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை