வடமத்திய மாகாணத்தின் விளையாட்டு போட்டி; பொலன்னறுவை ரோயல் கல்லூரி சம்பியன்

சமபோஷ 2019 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுபோட்டிகளின் வடமத்திய மாகாணத்தின் போட்டிகளில் வெற்றியாளராக பொலன்னறுவை ரோயல் கல்லூரி தெரிவாகியிருந்தது. இரண்டாமிடத்தை அநுராதபுரம் மத்திய கல்லூரியும்,மூன்றாமிடத்தை மெதிரிகிரிய தேசிய பாடசாலையும் பெற்றுக் கொண்டன. இந்தபோட்டிகள் ஜுலை மாதம் 11 ஆம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை அநுராதபுரம் மக்கள் மைதானத்தில் இடம்பெற்றதுடன், இதில் 3321போட்டியாளர்கள் 116 பாடசாலைகளிலிருந்து பங்கேற்றிருந்தனர்.

CBL நிறுவனத்தின் தயாரிப்பான சமபோஷ அனுசரணையில் இடம்பெற்ற இந்த போட்டிகள்,ஊவா,வடமத்திய,கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

பிரதேச கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டிகள், ஜுலை மாதம் முழுவதிலும் வெவ்வேறாக நடைபெறுகின்றன.

இந்தபோட்டிகள் தொடர்பாக வடமத்திய மாகாணத்தின் பிரதிகல்விபணிப்பாளர் வை. எம். எச். கே. அபேகோன் கருத்துத் தெரிவிக்கையில்,' ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சமபோஷ வடமத்திய மாகாணத்துக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சளைக்காமல் போட்டிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டபிள்ளை களை பாதுகாத்து, முன்னேறுவதற்கு சமபோஷ வழங்கும் அனுசரணை பெரிதும் பாராட்டுதலுக்குரியது.'என்றார்.

இந்த தேசிய பங்களிப்பு தொடர்பில் பிளென்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதமநிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,'நாம் 10 வருடகாலமாக,பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டிகள்,மலையக சிறுவர்கள் மற்றும் கனிஷ்ட விளையாட்டுபோட்டிகள், இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணைகளை வழங்கிவருகின்றோம். இதனூடாக சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் நாம் பங்களிப்பு வழங்குகின்றோம்.'என்றார்.

 

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை