கொழும்பு அணி 95 ஓட்டங்களால் வெற்றி

மாகாணங்களுக்கிடையிலான  19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டி

மாகாணங்களுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியில் கொழும்பு அணி 95 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.இத் தொடரின் மூன்றாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்கிரி தம்புள்ளை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 269 ஓட்டங்களை பெற்றது.கொழும்பு அணியின் தலைவர் காமில் மிஸ்ரா பெற்ற 152 ஓட்டங்கள் அவ்வணி முன்னிலை பெற்றது.அவ்வணி சார்பாக விக்கிரமசிங்க 30 ஓட்டங்களையும் விஜேசிங்க 29 ஓட்டங்களையும் பெற்றதே கூடுதலான ஓட்டமாகும்.

பந்து வீச்சில் கண்டி அணி சார்பாக சஞ்சய 4 விக்கெட்டையும் நதீஷான் இரண்டு விக்கெட்டையும் விக்கிரமசிங்க, பீரிஸ் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அத்துடன் 270 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய காலி அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக

விக்கிரமசிங்க மற்றும் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆடுவர்கள் என்ற நிலையில் விக்கிரமசிங்க 13 ஓட்டங்களையும் பெரேரா 16 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஜயதுங்க 30 ஓட்டங்களுடனும் ரத்நாயக்க 49 ஓட்டங்களுடனும் தரிந்து 32 ஓட்டங்களுடனும் பீரிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க அவ்வணி 38.2 ஓவர்கள் முடிவில் 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் கொழும்பு அணி சார்பாக பி என் டி சில்வா ,விஜேசிங்க தலா மூன்று விக்கெட்டையும் தினுஷ இரண்டு விக்கெட்டையும் ரத்நாயக்க,சந்தருவன் தலா ஒரு விக்கெட்டைய பதம் பார்த்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக காமில் மிஷ்ரா தெரிவானார்.

பரீத் ஏ. றகுமான்

Fri, 07/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை