73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து 73 ஒளியாண்டுகள் தொலைவில் நட்சத்திர அமைப்பு ஒன்றில் மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டீ.ஓ.ஐ.–270 என அறியப்படும் குள்ள நட்சத்திரம் ஒன்றை வளம் வரும் இந்த மூன்று கிரகங்களும் தனது சூரியனை நெருக்கமாகவும் சிறியதாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த அமைப்பில் ‘சுப்பர் –ஏர்த்’ என அழைக்கப்படும் எமது பூமியை விடவும் சற்று பெரிதான பாறை உலகம் ஒன்று இருப்பதோடு மற்ற இரண்டும் நெப்டியுனை விட சிறிதானதும் பூமியின் இரு மடங்கானதுமான இரு வாயுக் கிரகங்களாகும்.

பூமிக்கும் நெப்டியுனுக்கும் இடைப்பட்டதான இடைநிலை அளவு கொண்ட கிரகம் ஒன்று எமது சூரிய குடும்பத்தில் இல்லாத நிலையில் கிரகங்களின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு இது உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நாசாவின் டேஸ் செயற்கைக் கோளை பயன்படுத்தியே இந்த கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை