யெமன் வான் தாக்குதலில் சிறுவர் உட்பட 10 பேர் பலி

யெமனில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பரபரப்பான சந்தை ஒன்றின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சதா மாகாணத்தில் இருக்கும் அல் தபாத் சந்தை பகுதி மீது இந்த வான் தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது சவூதியின் எல்லை பகுதியை ஒட்டிய மாகாணமாகும்.

இந்த வான் தாக்குதலில் மேலும் 27 பேர் காயமடைந்தாக ஹூத்திக்களால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு சார்பில் சவூதி கூட்டணி 2015 தொடக்கம் யெமன் போரில் தலையிட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்காக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கூட்டணியின் வான் தாக்குதல்களில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தலைநகர் சனா உட்பட வடக்கு யெமனின் பெரும்பகுதியை ஹூத்து கிளர்ச்சியாளர்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை