ஹஜ் யாத்திரிகர் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

ஹஜ் கடமையில் ஈடுபடுவதற்கு இதுவரை 1,084,762 யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்ததாக சவூதி கடவுச் சீட்டு பொது இயக்கநரகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி சவூதி பிரஸ் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டது. இதில் 1,020,562 யாத்திரிகர்கள் வான் மூலமாகவும், 53,842 யாத்திரிகர்கள் தரை வழியாகவும் 10,358 யாத்திரிகர்கள் கடல் மார்க்கமாகவும் சவூதியின் புனித மக்கா நகரை அடைந்துள்ளனர்.

ஆறு நாள் யாத்திரையா மக்கா நகர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை மையமாகக் கொண்ட ஹஜ் கடமை வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவையேனும் செய்ய வேண்டிய கடமையாகும்.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை