திரியபியச திட்டத்தின் கீழ் புதிய வீட்டுக்கு அடிக்கல்

'நாட்டுக்காக ஒன்றினைவோம்' எனும் தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக சமுர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினத்தின் தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வீடு ஒன்றினை சமுர்த்தி திரியபியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

இப் புதிய வீட்டினை நிர்மாணிப்பதற்காக சுமார் இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகேயின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் வை.எல்.நியாஸ், பொத்துவில் 06 கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக் கல்லினை நட்டு வைத்திருந்தனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்-)

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை