நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு; பைசல் காசிம் அதிகாரிகள் சகிதம் பார்வை

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் சனிக்கிழமை ( 22 ) நேரில் சென்று பார்வையிட்டார்.

நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமையினை தடுக்க மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் பைசல் காசிம் எம். பி உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஒலுவில் துறைமுகம் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் வரை நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் இதன் பொது தெரிவித்தனர்.

கடல் அரிப்பினால் மீன்பிடி வாடிகள் பாதிப்புற்று கடல் ஊடறுத்து செல்லுவதனால் கரையோரத்திலுள்ள தென்னை மரங்களும் அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றமையால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறியதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இவ்விஜயம் மேற்கொண்டு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரைக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பிராந்திய பொறியியலாளர் கே.எம்.றிபாஸ், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜெசீர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள நிந்தவூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சித்தி மாஹிரா, உள்ளிட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.

அம்பாறை சுழற்சி நிருபர்

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை