பொது நிகழ்வின்போது மீண்டும் ‘நடுநடுங்கிய’ ஜெர்மனி அதிபர்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் எட்டு நாட்களுக்குள் இரண்டாவது தடவையாகவும் பெர்லினில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதும் நடுங்கியபடி தடுமாற்றத்திற்கு உள்ளான காட்சி பதிவாகியுள்ளது.

64 வயதான மேர்கல் தனது உடல் முழுவதும் நடுங்க தடுமாற்றத்துடன் கைகளைக் கட்டிக்கொள்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. சுமார் இரண்டு நிமிடங்களின் பின் ஸ்திர நிலைக்கு வந்த அவர் புதிய நீதி அமைச்சருக்கு கைலாகு கொடுத்தார். அவர் குடிக்க தண்ணீர் கேட்டபோதும் அதனை குடிக்கவில்லை. உடல்வரட்சியே காரணம் என்று இது போன்ற முன்னை சம்பவத்திற்கு மேர்கல் காரணம் கூறி இருந்தார்.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் வெய்யிலுக்கு மத்தியில் வெட்ட வெளியில் நின்றிருந்தபோது மேர்கலுக்கு நடுக்கம் ஏற்பட்டது. எனினும் தண்ணீர் குடித்த பின் நிலைமை சரியானதாக மேர்கல் கூறியிருந்தார். இந்நிலையில் சூடான காலநிலை நிலவியபோதும் பெலிவு கோட்டையில் குளிரான சூழலிலலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மேர்கல் திட்டமிட்டபடி ஜப்பான் பயணிப்பதாக அவரது பேச்சாளர் குறிப்பிட்டார். “எல்லாம் தி்ட்டமிட்டபடி இடம்பெறும். அதிபர் நலமாக உள்ளார்” என்று பேச்சாளர் ஸ்டெபன் சிபேர்ட் குறிப்பிட்டார்.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை