ஐ.நா ஆதரவு லிபிய அரசு மூலோபாய நகரை மீட்டது

கிளர்ச்சியாளர்களுடனான மோதலை அடுத்து மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கர்யான் நகரை மீட்டதாக சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசு அறிவித்துள்ளது.

ஜெனரல் கலீபா ஹப்தரின் போராளிகள் தலைநர் திரிபோலி மீதான தாக்குதலுக்கு கர்யான் நகர் பிரதான தளமாக செயற்பட்டு வந்தது. எனினும் அவரது லிபிய தேசிய இராணுவம் இந்த நகரில் தோல்வியுற்றதை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

லிபியாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த முஅம்மர் கடாபி 2011 இல் பதவி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்ட பின் அங்கு அரசியல் பிளவுகள் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆரம்பித்த ஐ.நா அங்கீகாரம் பெற்ற அரசுக்கு எதிராக ஹப்தர் படை தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்து பலரும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஹப்தர் படை தலைநகர் திரிபோலியை நோக்கி வேகமாக முன்னேறியதோடு கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி கர்யானை கைப்பற்றியது.

எனினும் முன்னரங்குகளில் இந்த முன்னேற்றம் ஸ்தம்பித்தது. வான் தாக்குதலின் உதவியோடு லிபிய அரச படை கர்யான் நகரின் மீது புதனன்று எதிர்பாராத தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்தப் படையினர் கர்யான் நகரில் நிலைகொண்டிருக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை